. -->

Now Online

FLASH NEWS


Monday 25 March 2019

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடம் கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் புகார்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில் வராத கேள்விகள் பொதுத்தேர்வில் கேட்கப்பட்டு உள்ளன.
ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டும் இல்லாமல் 5 மதிப்பெண் கேள்விகளும் முன்பு கேட்கப்படாதவை எனவும் தெரிவித்துள்ளனர்.



வாட்ஸ் அப் வைரல்

முகமறியா மேதாவியே.....!
ஏஞ்சாமி...
இதுகேள்வித்தாளா....?
இது யாருக்கான பரீட்சை...?
கோவணக்குடிகளுக்கு
கோட் சூட் எதுக்கு சாமி...?
தொடுகோட்டை தொலைதூரம் விரட்டியாச்சி....
திட்டவிலக்கத்த திணற
அடிச்சாச்சி
காரணிப்படுத்துதலுக்கு
கரண்ட் ஷாக் கொடுத்தாச்சி
நாற்கரத்த நாண்டுகிட விட்டாச்சி
வர்க்கமூலத்துக்கு
விஷம் வச்சி கொன்னாச்சி
அணிகளுக்கு ஆப்பு வச்சாச்சி
இயற்கணிதத்தை இயற்கை எய்த வச்சாச்சி
மொத்தத்தில் மனிதம் மரித்துப் போயாச்சி
கணிதத்தைக் படு குழியில் தள்ளியாச்சி
கணித மேதாவியே
மூன்று திருப்புதல் தேர்வுகளின் வினாத்தாட்களைப் பார்...
ஏதாவது கோடி காட்டினாயா..?
தேவசேனா அவர்களே....
தீப்பந்தம் கொண்டு
நெஞ்சை எரிக்க
ஆடை அகன்று
கவசம் காட்டும் பாகுபலியிடம் உன் கேள்வித் திறமையைக்
காடடியிருக்கலாம்..
நெருப்பு வாசத்துக்கே சுருண்டு விழும் முருங்கைப் புழுக்களுக்கு  இப்படி ஒரு தேர்வா...?
கணித வாத்திகளின
மனங்களில் இழவு வீட்டு வலிகளை
ஏத்திவிட்ட மகராசா....
நல்லா இருக்கணும் சாமி நீங்க.......!!!!

இதுபோன்ற கருத்துக்களை
சமூக ஊடகங்களில் ஆசிரியர்கள் பலர் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.