. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 March 2019

'நீட்' தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?








'நீட் தேர்வில் வெற்றி பெற, நேர மேலாண்மை மிகவும் அவசியம். பாட புத்தகங்களை முழுமையாக படித்தாலே, நல்ல மதிப்பெண்களுடன் அரசு கல்லுாரிகளில் எளிதாக சேர்ந்துவிட முடியும்,'' என பயிற்சியாளர் ஆனந்த் பேசினார்.










நீட் தேர்வில் நேர மேலாண்மை மிகவும் முக்கியம், 180 கேள்விகளுக்கு, 180 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். உங்களது பாடபுத்தகங்களை முழுமையாக படித்தால் மட்டும் போதுமானது. என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தின் படி, பிளஸ்2, பிளஸ்1 பாடங்கள் அனைத்துக்கும், சம மதிப்பு கொடுத்து படிக்க வேண்டும்.எழுதி படிக்க வேண்டும்மொத்தமுள்ள, 720 மதிப்பெண்களில், 450க்கு மேல் பெற்றுவிட்டாலே, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் பெற்று விடலாம். தெளிவான திட்டமிடலுடன் படிக்க வேண்டும்.உயிரியல் பிரிவில், படங்கள் சார்ந்த கேள்விகளுக்கும், அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 





இத்தேர்வுக்கு படிப்பது மட்டும் போதாது; மாதிரி தேர்வுகளை எழுதி பழக வேண்டும். மாதிரி தேர்வுகளின் மூலம் தான், நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை கண்டுபிடித்து, அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.டிரெஸ் கோட் விதிமுறைகுறிப்பாக, டிரெஸ் கோட்' விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். கெடுபிடி அதிகமாக இருப்பதால், விதிமுறைகளை முன்கூட்டியே படித்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அனுமதியில்லாததை எடுத்துச்சென்று, கடைசி நேரத்தில் பதட்டம் அடைய வேண்டாம்.ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 






ஓ.எம்.ஆர்., தாளில் தேர்வு எழுத வேண்டும் என்பதால், மாதிரி தேர்வை, அத்தாளிலேயே எழுதி பழகுங்கள். இதில் ஏற்படும் பிழையால் மாணவர்கள் பலர், தெரிந்த கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்து விடுகின்றனர். தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.