. -->

Now Online

FLASH NEWS


Monday 6 May 2019

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.10% தேர்ச்சி; 13 பேர் 499 மதிப்பெண்கள்



நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.91.10 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். வழக்கமாக மே மாத இறுதியில் தான் தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் ஒரு மாதம் முன்னதாகவே பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட முடிவு செய்தது. அதன்படி மே 5-ம் தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் கசிந்தது. ஆனால், தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்தநிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது..91.10 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.85 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு முதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்க 71 நிபுணர்கள் கொண்ட சிறப்பு உதவிக்குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. 1800-118-004 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது counselling.cecbse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்த உதவிக் குழுவை தொடர்பு கொள்ளலாம். தேர்வில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள், மேல்நிலைக் கல்வி குறித்த தகவல்கள் என அனைத்துவிதமான ஆலோசனைகளும் இதன் மூலம் வழங்கப்படும்.