. -->

Now Online

FLASH NEWS


Monday 13 May 2019

விதிமுறை மீறி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், விதிமுறை மீறி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.லோக்சபா தேர்தல் அறிவிப்பால், பள்ளிகளுக்கு தேர்வுகள் வழக் கத்துக்கும் முன்பாகவே, நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வுகளும், மார்ச் மாதத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில், ஏப்.,18ம் தேதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.இருப்பினும், கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படக்கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர்.நடப்பாண்டில், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென கல்வித்துறையும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தவிர, சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், சில தனியார் பள்ளிகளில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். புகார் தெரிவிப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என, பெற்றோரும், புகார் பதிவு செய்யாமல் உள்ளனர். உடுமலை கல்வி மாவட்ட அலுவலர்கள், இதுகுறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும்.விதிமுறை மீறி, விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.