. -->

Now Online

FLASH NEWS


Tuesday 21 May 2019

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்பள்ளிகள் திறப்பதைதள்ளி வைக்க வேண்டும்.தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர்பி.கே.இளமாறன் கோரிக்கை

  

  வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல்நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 3 ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்கவேண்டும் என்று மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

      வெயிலின் தாக்கம் காரணமாக சின்னம்மை மற்றும் சரும நோய்கள் வராமல் தடுக்கவும் மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்க வேண்டும். கற்றலும்,கற்பித்தலும் சிறப்பாக நடந்திட மாணவர்களின் உடல்நலம் மிகவும் அவசியம்.


   மேலும், வெயிலின் கடுமையினாலும் மழைப் பொய்த்துப் போனதால் வறட்சியினால்  தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்படுகிறது.பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டி 106 டிகிரி வரை சுட்டெரிக்கிறது.

   அனல்காற்றும் வீசுவதால் பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அப்படியிருக்க பள்ளிச்சிறார்கள் எப்படி இந்த வெயிலைத் தாங்கமுடியும்.எனவே மாணவர்களின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டும் பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளின்படியும்  கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் - 3 ந்தி திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்  தமிழக முதல்வரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.