. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 May 2019

சவால்! இடைநிற்ற குழந்தைகளை கணக்கெடுப்பதில் ... தவறான தகவலால் தவிக்கும் ஆசிரியர்கள்

மதுரை:மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மாவட்டத்தில் இந்தாண்டு 800 பேர் கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கல்வி ஒன்றியங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமையில் வட்டார வள மைய அலுவலர்கள் (பி.ஆர்.டி.,க்கள்) மற்றும் சிறப்பாசிரியர் என 142 பேர் ஈடுபட்டுள்ளனர்.மதுரையில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். அவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்பவில்லை. இதனால் 'சம்பந்தப்பட்ட குழந்தை வெளியூரில் இருந்து விடுமுறைக்கு வந்துள்ளது, உறவினர் வீட்டு பிள்ளை, ஏற்கனவே பள்ளியில் படிக்கிறது...' என தவறான தகவல்கள் தருகின்றனர்.இதனால் உண்மையான இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிவதில் சவாலாக உள்ளது.
இருப்பினும் தொடர்ந்து குழந்தை கண்டறிதல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு மதுரையில் 1371 குழந்தை கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு இதுவரை 5 - 14 வயதுக்குட்பட்ட 125 பேர், 15- 18 க்கு உட்பட்ட 93, சிறப்பு குழந்தை 54 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். மே 25 வரை இம்முகாம் நடக்கவுள்ளது. இந்தாண்டும் 800க்கும் மேல் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பள்ளி, இணைப்பு மையம், ஆதரவற்ற குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பகல் நேர பாதுகாப்பு மையங்களில் சேர்க்கப்படுவர் என்றார்.

Source: Dinamalar