. -->

Now Online

FLASH NEWS


Friday 10 May 2019

கல்வித்துறையில் அதிரடி மாற்றம்!! மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு செய்தால் போதும்!! மொழிப்பாடங்களுக்கு இனி ஒரு தாள் மட்டுமே!!! கல்வித்துறை அதிரடி











10 ஆம் வகுப்பு இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒரே தாள் தான் !!!.


11 & 12 ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்கள் மட்டும் போதுமானது !!!.


பள்ளி கல்வித் துறை - தமிழக  அரசுக்கு பரிந்துரை !!!.

விரிவான செய்திகள்:

12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு முதல் அதனை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு தேர்வுகள் 600 மதிப்பெண்களில் நடந்தது.


இந்நிலையில், தற்போது 600 மதிப்பெண்ணை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



மேலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்தால் போதும்.


10-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 1 மற்றும் 2-ம் தாள் நீக்கப்பட்டு, ஒரே பாடமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.


பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை பள்ளிக்கல்வியில் இருந்து தமிழை அகற்றும் முயற்சி என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.