. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை








 90% தொடக்கப் பள்ளிகளில் கணினி, இணைய வசதி இல்லை.

50% க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பணிகளை பிறர் உதவி அல்லது இணைய தள மையம் மூலம் தகவல்களை உள்ளீடு செய்கின்றனர். இதனால் தவறு நிகழ்கிறது.

சில நேரங்களில் உயர் அலுவலர்கள் உரிய நேரம் தராமல் அவசரப் படுத்துகின்றனர். ஆகவே இன்றைக்கு எமிஸ் பணியை யார் மூலமோ, ஏதோ முடித்தோம் என்ற மனநிலை சில தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது.

BRTE க்கள் பள்ளி வேலை நாட்க ளில் பள்ளிக்கு வந்து, பள்ளி சார்ந்த, ஆசிரியர்கள் சார்ந்த, மற்றும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்று, உரிய ஆவணங்களை அல்லது பதிவேடுகளை சரி பார்த்து, பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலம், எமிஸ் பணிகளை மிகத் துல்லியமாக, 100% சரியாக முடிக்க முடியும்.



ஜுன் மாதம் முழுக்க பள்ளிப் பார்வையை தவிர்த்து எமிஸ் பணிகளை மட்டும் செய்தாலே 100% சரியாக செய்ய முடியும்.

ஒரு BRTE க்கு சராசரியாக 10 பள்ளிகள் மட்டுமே இருப்பதால், அவர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை இராது. இதனால் கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில், யாருக்கும் எந்த பாதகமும் வராது.

தலைமை ஆசிரியர்களுக்கு பணிச் சுமையோ, தேவையற்ற அலைச்சல்களோ, கூடுதல் செலவினங்களோ ஏற்படாது.

பள்ளிக்கல்வித் துறை இந்த ஆலோசனையை ஏற்குமா?