. -->

Now Online

FLASH NEWS


Thursday 27 June 2019

106 மையங்களில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டாம்: தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

'நான்கு மாவட்டங்களில், 106 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டாம்' என, தமிழக தொடக்க கல்வி இயக்குனர் கருப்புசாமி அறிவுறுத்தியுள்ளார்.அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றரிக்கை விபரம்: தமிழகத்தில், 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், கரூர், காஞ்சிபுரம், திருச்சி, விருதுநகர் ஆகிய, நான்கு மாவட்டங்களில், 106 அங்கன்வாடி மையங்கள், கண்ட்ரோல் சென்டராக இருப்பதால், அங்கு, எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டியதில்லை. இந்த மையங்களில் பணி நிரவல், மாற்றுப்பணி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்தால், அவர்கள் ஏற்கனவே வேலை செய்து வந்த பள்ளியில் தொடர்ந்து பணிபுரியலாம்.

இல்லையெனில், 2019-20ம் ஆண்டு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.