. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 June 2019

குழந்தைகளுக்கு இனி 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி திட்டம்- மத்திய அரசு

இந்தியாவில் இப்போது கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 5 வயதில் இருந்து கட்டாய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது இதை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது சம்பந்தமாக மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது.இதன்படி கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை கொண்டுவர உள்ளனர். தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி உரிமை சட்டம் அமலில் உள்ளது. இனி அது 3 வயதில் இருந்து 12-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும்.

அங்கன்வாடியில் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது கவனிக்கப்படுகிறார்கள். இனி 3 வயதில் இருந்து 8-ம் வகுப்பு வரை இதன் மூலம் கவனிக்கப்படுவார்கள்.இதற்காக ஆங்காங்கே உள்ள அங்கன்வாடிகள் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்கப்படும். அதாவது ஆரம்ப பள்ளிகளின் ஒரு அங்கமான அங்கன்வாடி செயல்படும்.தற்போது அங்கன்வாடிகளில் பெயரளவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அது முற்றிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. விளையாட்டுடன் கூடிய கண்டுபிடிப்பு கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம் 3 வயதில் இருந்தே கல்வி கற்கும் திறன் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். மேலும் மும்மொழிகளை கற்றுக் கொடுக்கும் திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு அங்கன்வாடிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நேரடியாக கவனித்து வந்தது. இப்போது மனிதவள மேம்பாட்டுத்துறை இணைந்து இதை கவனிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மதிய உணவு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இனி காலை உணவும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்காக புதிய பாடமுறை திட்டம் உருவாக்கப்படும். இதன்படி அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு இனி சிறப்பு பயிற்சி அளித்து குழந்தைகளை வித்தியாசமான முறையில் கவனிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.