. -->

Now Online

FLASH NEWS


Wednesday 31 July 2019

11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தொடர்ந்து விலையில்லா மிதிவண்டி தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்சவரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.


2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட 7 லட்சத்து 39 ஆயிரத்து 636 மிதிவண்டிகள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 மிதிவண்டிகள் 2018-2019-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்திற்காக 2019-2020-ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.73 கோடி, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.65.48 கோடி என மொத்தம் ரூ.138.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கும் தொடர்ந்து விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். இத்திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.