. -->

Now Online

FLASH NEWS


Wednesday 17 July 2019

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம்

தமிழக அரசுப்பள்ளிகளில் 10ஆயிரம் உபரி பட்டதாரிஆசிரியர்களைஇடைநிலைஆசிரியர்களாக பணி இறக்கம்செய்ய பள்ளிக்கல்வித்துறைஅதிரடியாக முடிவுசெய்துள்ளது.
  
தமிழகத்தில் 37 ஆயிரத்து 211அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 2லட்சத்து 60 ஆயிரம்ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்அதேநேரத்தில்ஒவ்வொரு ஆண்டும்அரசுப்பள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை படிப்படியாகசரிந்து வருகிறதுஇதனைதடுக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்துவந்தாலும்அரசுப்பள்ளிகளில்உபரி ஆசிரியர் என்ற நிலைநீடித்து வருகிறதுஎனவே,உபரி ஆசிரியர்களைகணக்கெடுத்து அவர்களைபணி நிரவல் மூலம்வேறுபள்ளிகளுக்கு மாற்றமுடிவு செய்யப்பட்டது.

இதற்காக உபரி ஆசிரியர்கள்தொடர்பான கணக்கெடுப்புகடந்த ஆகஸ்ட் மாதம்நடந்தது.இதில் 16 ஆயிரத்து110 ஆசிரியர்கள் உபரியாகஇருப்பதாக தெரிய வந்தது.இவர்களை வேறுபள்ளிகளுக்கு கவுன்சலிங்மூலம் பணிநிரவல்செய்வதற்கான முறையானஅரசின் உத்தரவு கடந்த மாதம்20ம் தேதி முடிவானது.இவர்களில் 14 ஆயிரம் பேர்பட்டதாரி ஆசிரியர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கதுஇவர்களில்ஆயிரம் பேர் வரை பணிநிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்குபணியிடமாற்றம் செய்யவும்,மற்றவர்களுக்கு மாற்றுப்பணிவழங்கவும்பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளதுமத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை,கல்வித்துறையில்தேவையற்றசெலவினங்களைகட்டுப்படுத்துமாறு மாநிலஅரசுகளைவலியுறுத்திவருகிறதுஅதற்கேற்ப,குறைந்த மாணவர் சேர்க்கைகொண்ட பள்ளிகளைஒன்றுடன் ஒன்று இணைத்துஒரே பள்ளியாக மாற்றுவது,இதன் மூலம் உருவாகும் உபரிஆசிரியர்களுக்குமாற்றுப்பணி வழங்குமாறுஅழுத்தம் கொடுத்துவருகிறது.
  
தற்போது தமிழகம் முழுவதும்15க்கும் குறைவானமாணவர்களை கொண்டபள்ளிகளை இணைக்கும்பணிகள் நடந்து வருகிறது.தற்போதைய சூழலில்மாநிலத்தில் தொடக்கக்கல்விநிலையில் 2,008 இடைநிலைஆசிரியர்களும், 271 பட்டதாரிஆசிரியர்களும்,பள்ளிக்கல்வித்துறையில் 208முதுநிலை ஆசிரியர்களும், 13ஆயிரத்து 625 பட்டதாரிஆசிரியர்களும் உபரியாகஉள்ளனர்ஏற்கனவே 2ஆயிரம் இடைநிலைஆசிரியர்கள் அங்கன்வாடிைமயங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உபரியாகஉள்ளபட்டதாரி ஆசிரியர்களில்ஆயிரத்து 625 பேரைபணிநிரவல் செய்தாலும்,மீதமுள்ள 10 ஆயிரம் பேரைஇடைநிலை ஆசிரியர்களாகபணியிறக்கம் செய்யபள்ளிக்கல்வித்துறைமுடிவெடுத்துள்ளது.இதற்கான அனுமதியைதேசிய ஆசிரியர்கல்விக்குழுமத்திடம் தமிழகபள்ளிக்கல்வித்துறைகேட்டுள்ளதாக ஆசிரியர் சங்கநிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு பணியிறக்கம்செய்யப்படும் பட்டதாரிஆசிரியர்களின் ஊதியவிகிதத்தில் எந்த மாற்றமும்இருக்காது என்றுபள்ளிக்கல்வித்துறைவிளக்கம் அளித்தாலும்,தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாடம்நடத்துமாறு அழுத்தம்கொடுப்பதுவேதனைக்குரியது எனஅவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக தமிழ்நாடுதொடக்கநடுநிலைப்பள்ளிபட்டதாரி ஆசிரியர் சங்கபொதுச்செயலாளர் பி.சேகர்கூறியதாவது: 'உபரி ஆசிரியர்பணியிடங்கள் என்றுஇவர்கள் கணக்கு காட்டுவதேதவறுகட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 30 மாணவர்களுக்குஒரு ஆசிரியர் என்றவிகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும்ஆனால் தமிழகஅரசு 65 மாணவர்களுக்கு ஒருஆசிரியர் என்ற நிலையைஏற்படுத்த முயற்சிக்கிறது.

அதேபோல் அரசுப்பள்ளிகளில்ஆங்கிலம் மீடியம்தமிழ்மீடியம் என்று இருந்தால் 15மாணவர்களுக்கு ஒருஆசிரியர் வீதம் 2 பட்டதாரிஆசிரியர்கள் இருக்கவேண்டும்தவிர இடைநிலைஆசிரியர்கள்குழந்தைகளுக்கான மனநலபயிற்சியை பெற்றுவருகின்றனர்பட்டதாரிஆசிரியர்கள் பி.எட் படிப்பில்வயது வந்தோருக்கானமனநலம் தொடர்பாக பயிற்சிபெற்று வருகின்றனர்இந்தவிகிதாச்சாரத்தைகடைபிடிக்காமல் எப்படிதமிழகத்தின் கல்வித்தரம்உயரும்அரசுப்பள்ளிகளில்மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவேண்டும் என்றால்தரம் வாய்ந்த தனியார்பள்ளிகளில்கடைபிடிக்கப்படும் ஆசிரியர்,மாணவர் விகிதாச்சாரத்தைகடைபிடிக்க வேண்டும்.

 இதை தவிர்த்துவிட்டுவேண்டும் என்றே எங்களைபழிதீர்க்க வேண்டும்என்பதற்காக பட்டதாரிஆசிரியர்களை இடைநிலைஆசிரியர்களாக நிலை இறக்கமுயற்சிப்பது என்ன நியாயம்?எனவேஅரசு உபரிஆசிரியர்கள் என்ற பெயரில்பட்டியலை தயாரித்த உடனேநாங்கள் கடந்த 7ம்தேதிஎங்கள் நிலையைவிளக்க மாநில நிர்வாகிகள்மட்டும் எழிலகம் அருகில்உண்ணாவிரதம்மேற்கொண்டோம்அப்போதுவரும் 16ம் தேதி(இன்று)முதல்வரை சந்திப்பதுஎன்று தீர்மானித்தோம்.இதையறிந்த அரசுஎங்களிடம்சட்டமன்றம் நடந்துகொண்டிருப்பதால்கூட்டத்தொடர் முடிந்த பிறகுசந்திக்கலாம் என்றுதெரிவித்ததுஆனாலும்,ஜாக்டோ ஜியோ மாநிலஒருங்கிணைப்புக்குழுவைசேர்ந்த 20 பேர் முதல்வரைசெவ்வாய்கிழமை(இன்று)திட்டமிட்டபடி சந்திப்பது என்றுமுடிவு செய்துள்ளோம்'என்றார்.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 2லட்சத்து 60ஆயிரம்ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்கடந்த ஆகஸ்ட்மாதம் கணக்கெடுப்பில் 16ஆயிரத்து 110 ஆசிரியர்கள்உபரியாக இருப்பதாகதெரியவந்ததுஇவர்களில் 14ஆயிரம் பேர் பட்டதாரிஆசிரியர்கள்இவர்களில் 4ஆயிரம் பேர்வரை பணிநிரவல் மூலம் பணி ஒதுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள 10 ஆயிரம் பேரைஇடைநிலை ஆசிரியர்களாகபணியிறக்கம் செய்யபள்ளிக்கல்வித்துறைமுடிவெடுத்துள்ளது.