. -->

Now Online

FLASH NEWS


Sunday 21 July 2019

பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி








ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான  பயோமெட்ரிக் கருவியில் இனி இந்திமொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை சந்தோம் சர்ச் அருகே உள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 வகுப்பில் வணிக வியல் படிக்கும் 20 ஆயிரம் மாண வர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழு வதும் பள்ளிகளில் 70 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


500 ஆடிட்டர்கள் இந்த மையங்களில் சிறந்த 500 ஆடிட்டர்கள் மூலம் மாணவர் களுக்கு பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு தயாராகும் முறை தொடர்பான பயிற்சிவகுப்புகள் நடத்தப்படும். பிளஸ் 2 முடித்தவுடனே சிஏ தேர்வு எழுதும் வகையில் மாணவர்கள் தயார் செய்யப் படுவார்கள். நாட்டிலேயே முதல்முறையாக இந்த முயற்சி தமிழகத்தில்தான் மேற்கொள் ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த பயிற்சி மேலும் பல மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஆசிரியர் வருகைப்பதிவுக்கான பயோ மெட்ரிக் கருவியில் இந்தி மொழி சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இனி அத்தகைய நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.