. -->

Now Online

FLASH NEWS


Friday 16 August 2019

திருக்குறள் எண்ணிக்கை அடிப்படையில் 1330 மரக்கன்றுகளை நட்டு அசத்திய கிராம இளைஞர்கள்

 

திருக்குறள் எண்ணிக்கை அடிப்படையில் செய்யாறு அருகே 1330 மரக்கன்றுகளை இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‘நீர்இன்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்பது திருக்குறளில் திருவள்ளுவரின் வாக்காகும். மழை இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ இயலாது. அந்த மழைக்கு ஆதாரம் மரங்கள் என்பதால் மரங்களை வளர்க்கும் எண்ணம் மாணவர்கள் மனதில் பதியவேண்டும் என்பதற்காக செய்யாறு அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் ஏனாதவாடி கிராமத்தில் 73வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் எண்ணிக்கையான 1330 திருக்குறள் போன்று மரக்கன்றுகளை தங்களது கிராமத்தில் மாணவர்களை கொண்டு நட முடிவு செய்தனர்.அதன்படி கிராமத்தில் காலியாக உள்ள ஏரி,குளக்கரை இடங்களை தேர்வு செய்தனர். நூறுநாள் தொழிலாளர்கள் மூலம் 1330 பள்ளங்களை தோண்டினர்.இதையடுத்து இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் வேம்பு, புங்கன், புளி, நெல்லி, பூவரசன் உள்ளிட்ட மரக்கன்றுகளை மாணவர்களை கொண்டு நேற்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.