. -->

Now Online

FLASH NEWS


Monday 12 August 2019

ஒரு வாரத்தில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்

கணினி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு இந்த வார இறுதிக்குள் தேர்வுசெய்யப்பட்டு 
பணிநியமனம் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,செங்கோட்டையன் கூறினார். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை  மற்றும் 'மேட்பிக் ஆஸ்திரேலியா' என்றநிறுவனமும் இணைந்து,அரசு பள்ளி மாணவர்கள்,கணிதப் பாடத்தை எளியவழியில் கற்பதற்கான,புதிய செயலி அறிமுகவிழாவை, ஈரோடு மாவட்டம்,கோபியில் நேற்று நடத்தின.இந்நிகழ்ச்சியில், முதுகலைபட்டதாரிஆசிரியர்கள், 128பேருக்கு, மடிக்கணினிவழங்கப்பட்டது.அப்போது,அமைச்சர்,செங்கோட்டையன் பேசியதாவது:அரசுபள்ளி மாணவர்கள், கணிதபாடத்தை எளிய வழியில்கற்க, புதிய செயலி மூலம், 501 ஆசிரியர்கள் பயிற்சிபெற்றுள்ளனர்.

கணித பாடத்தில், 21சதவீதம் மாணவர்கள்பின்தங்கியுள்ளதாக,அண்ணா பல்கலைஆய்வில் தெரியவந்துள்ளது.ஆறு முதல்எட்டாம் வகுப்புகளுக்கு, 'டேப்' வழங்கப்பட்டுள்ளது.இதில், 'சாப்ட்வேர்'உருவாக்கி, அரசு பள்ளிமாணவ - மாணவியர்சரளமாக, ஆங்கிலம் பேசநடவடிக்கைமேற்கொண்டுள்ளோம்.

இந்தாண்டு அரசு பள்ளிகளில், 1.78 லட்சம், மாணவ -மாணவியர் கூடுதலாகசேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில்,14 ஆயிரம்ஆசிரியர்கள், கூடுதலாகஉள்ளனர். ஒரு வாரத்தில், 'கவுன்சிலிங்' மூலம்,கணினி ஆசிரியர்கள்நியமிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.