. -->

Now Online

FLASH NEWS


Saturday 7 September 2019

பின்லாந்தில் கல்விமுறை எப்படி இருக்கிறது தெரியுமா!' - சிலாகித்த அமைச்சர் செங்கோட்டையன்


போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்காக மாநில அளவில், முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர்கள் பயிற்சி முகாம் ஈரோட்டில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இந்தப் பயிற்சி முகாமினைத் தொடங்கி வைத்தனர். மாவட்டத்துக்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 320 ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி முகாமில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்.

அவர்களுக்கு தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு நீட், ஜேஇஇ, பட்டயக் கணக்காளர் மற்றும் திறனறித் தேர்வுகள் என அனைத்துக்கும் மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``பின்லாந்து போன்ற வெளிநாடுகளில் தொழில்சார்ந்த கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. 2 வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், 6 வயது ஆன பிறகுதான் கல்வியைக் கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகள் போன்றவற்றைக் கற்றுத் தருகின்றனர்.

பள்ளிக்கு வர வேண்டும் எனச் சிறு குழந்தைகள்கூட விரும்பும் சூழ்நிலை அங்கு உள்ளது. அங்கு அரசே பள்ளிகளை முழுமையாக நடத்துகிறது. 9-ம்வகுப்பு படிக்கும்போதே மாணவர்களுக்கு தொழில் திறன்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 18 வயதுக்குப் பிறகு தங்கள் பெற்றோர் உதவி இல்லாமலே, வாழ்க்கை நடத்துமளவுக்கு அங்கு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று, வெளிநாடுகளின் பாணியில் தமிழக கல்விமுறையிலும் மேலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஆற்ற வேண்டும். ஆசிரியர்கள் வேலை நாள்களில் போராடக் கூடாது என்பது அரசின் வேண்டுகோள். தற்போதைய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு 240 நாள்கள் கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால், 210 நாள்கள்தான் பள்ளிகள் நடைபெறுகின்றன.

அமைச்சர் செங்கோட்டையன்பின்லாந்தில் 2 வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், 6 வயது ஆன பிறகுதான் கல்வியைக் கற்றுத்தருகின்றனர்.
இதில் 18 நாள்கள் ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்குகிறோம். கற்பிக்கும் நாள்கள் குறையும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.