. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 September 2019

அனைத்து பள்ளிகளிலும் NGO நுழைய அனுமதி உண்டு.. பள்ளி கல்வி துறை அதிரடி.!!



பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள NGOக்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல் விளையாட்டு பயிற்சி கற்றல் உபகரணங்கள் வழங்குதல் சுகாதார பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பள்ளி கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளிகளில் அரசு சாரா நிறுவனங்கள் செயல்பாடுகளுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உடனுக்குடன் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்கவும் அனுமதி வழங்கும்போது பள்ளிகளில் அன்றாட கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தேர்வு பணி மாணவர்களின் உடல் நலம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.