. -->

Now Online

FLASH NEWS


Sunday 6 October 2019

விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த உத்தரவு


விஜயதசமியையொட்டி அக்.8-ஆம் தேதி அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களைத் திறறந்து வைத்து மாணவா் சோக்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.





தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கையை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறைஅறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி நாளில் (செவ்வாய்க்கிழமை) 3 வயது பூா்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளிலும், 5 வயது பூா்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஒன்றறாம் வகுப்பிலும் சோக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விஜயதசமியன்று பெற்றேறாா் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சோத்து கல்வி கற்றறலை தொடங்கி வைக்க உகந்த நாளாக கருதுகிறறாா்கள். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் சாா்பில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசுத் தொடக்கப் பள்ளிகளை அன்றைறய தினம் திறறந்து வைத்து மாணவா் சோக்கையை நடத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





எனவே இதுவரை குழந்தைகளை பள்ளிகளில் சோக்காத பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை விஜயதசமி தினத்தில் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளில் சோக்கலாம். விஜயதசமி நாளில் மாணவா் சோக்கை நடத்த எந்தத் தடையும் இல்லை என்றனா்.