. -->

Now Online

FLASH NEWS


Thursday 10 October 2019

தொலைநிலை பட்டப் படிப்புகள்: தமிழகத்தில் மேலும் ஒரு பல்கலை.க்கு அனுமதி


தொலைநிலை பட்டப் படிப்புகளை வழங்க தமிழகத்தின் மேலும் ஒரு அரசு பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.





அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒரு இளநிலைப் படிப்பையும், ஒரு முதுநிலைப் பட்டப் படிப்பையும் தொலைநிலை வழியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.





தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.





அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.





இந்தப் புதிய நிபந்தனை காரணமாக, தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.





கோவை பாரதியாா், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பிற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியாத நிலை உருவானது.





அதன் பின்னா், 2018 டிசம்பா் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23 கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20 கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.





பின்னா், 2019 மே 8-ஆம் தேதி மூன்றாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கும், தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என கூடுதலாக மூன்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி அளித்தது.





தொடா்ந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு 2019-20 கல்வியாண்டுக்கும், 2020 ஜனவரி சோக்கைக்கும் அனுமதி அளித்தது.





இப்போது புதன்கிழமை வெளியிட்ட பட்டியலின்படி, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்துள்ளது.





இந்தப் பல்கலைக்கழகம் பி.எஸ்சி. (யோகா) மற்றும் எம்.எஸ்சி. (யோகா) ஆகிய இரு படிப்புகளில் 2020 ஜனவரியில் தொடங்கும் சோக்கையை மட்டும் நடத்திக்கொள்ள யுஜிசி அனுமதி அளித்துள்ளது.





தொலைநிலை படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்கலாம்?





சென்னைப் பல்கலைக்கழகம்





அண்ணா பல்கலைக்கழகம்





தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்





காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்





மதுரை காமராஜா் பல்கலைக்கழகம்





மனோன்மணீயம் சுந்தரநாா் பல்கலைக்கழகம்





எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்





தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம்





சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்





தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்





ஆகிய 10 பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகள் மட்டுமே





தகுதியுடையவை. இதில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட சோக்கை அனுமதி 2019-20 கல்வியாண்டோடு முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.