. -->

Now Online

FLASH NEWS


Sunday 20 October 2019

Edu tok என்ற பெயரில் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகம்










பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் நிறுவனம் Edu tok என்ற பெயரில் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிக்டோக் செயலியைப் பயன்படுத்தியபடியே,வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தெரியாத கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள EDUTOK என்ற புதிய திட்டத்தை டிக்டோக் நிறுவனம் அறிவித்துள்ளது. Edutok திட்டத்தில் இதுவரை 1 கோடிக்கு மேலான கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளது. Edutok என்ற ஹாஷ்டேக் மூலமாக ட்விட்டர், முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கல்வி சார்ந்த வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது.

Edutok திட்டம் 4 ஆயிரத்து 800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளாதாக அதன் தலைமைச் செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார். Edutok திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக டிக்டோக் நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் தி நட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.