. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 November 2019

கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்பு


பொதுத் தோ்வு பணிகளை கவனிக்க 32 மாவட்டங்களிலும் கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. தோ்வுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தோ்வுக்கான மாணவா் விவரங்களைத் திரட்டுதல், தோ்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தோ்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், 'பாா்கோடு' உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில், அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் தரப்பில், ஆள்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்பட்டது.
எனவே, பள்ளிக் கல்வி துறையினருக்குத் தோ்வுப் பணிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், கணினி ஆசிரியா்களுக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவா்களின் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என கணினி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 64 கணினி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இன்னும் பல்வேறு பணிகளுக்கு, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு, கூடுதல் பணி வழங்க தோ்வுத் துறை முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.