. -->

Now Online

FLASH NEWS


Sunday 17 November 2019

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது.



இன்று கோயமுத்தூர் மாநகரில் 

பெண்ணிய நிறுவனமும் 

உயிர் தளிர் ஆராய்ச்சி மற்றும் வள நிறுவனமும் இணைந்து பெண்ணியம் குறித்த  கருத்தரங்கமும்  பல்துறை  சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 

அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் தி.சேகர் அவர்களுக்கு பள்ளி மாணவர்களை அறிவியலில் மாணவர்களை வெளிக்கொணரும் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதற்காகவும் கிராமப்புற மாணவர்களை கொல்கத்தா சர்வதேச  அறிவியல்  திருவிழாவில் பங்கேற்க செய்து அவர்களுக்கு   விமான பயண அனுபவத்தை அளித்தமைக்காகவும்

காவாந்தண்டலம் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ப.சரவணன் அவர்களுக்கு 

ஊரக பகுதி மாணவர்களுக்கு தனது சொந்த முயற்சியில் கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தின் மூலமும்  அவர்களுக்கு ஆடல் பாடல் மூலம் உற்சாகமுடன்  எளியவழியில் கல்வி கற்பிப்பதற்காகவும்

இளையனார் வேலூர் தொடக்கப்பள்ளியின்  இடைநிலை ஆசிரியர் திரு.ஏ.இரமேஷ் அவர்களுக்கு 

கற்றல் கற்பித்தலை நாடக வடிவிலும் 
பொம்மலாட்டம் மற்றும் கலைவழியிலும் 
கிராமப்புற மாணவர்களுக்கு சொந்த முயற்சியில் தகவல் தொழிற்நுட்பம் மற்றும் கைபேசி செயலிகள் மூலமும் கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்தி தனியார் பள்ளிக்கு இணையாக  அரசுப்பள்ளியை உயர்த்தி வருவதை பாராட்டியும் 

கல்வி சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை  இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பி.டி.எம்.டி.எம் கல்லூரி உதவி பேராசிரியர் திரு.பால்பாண்டி அவர்கள் ஒருங்கிணைத்து விருதுகளை வழங்கினார்.