. -->

Now Online

FLASH NEWS


Wednesday 4 December 2019

வந்தாச்சு தேர்தல்; அலுவலர்களுக்கு பயிற்சி


தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து, உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் ஊரகப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும், 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.இதற்காக, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்திற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். வேட்புமனுக்களை பெறுவது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்ப பெறுதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை, மற்ற வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், எக்காரணத்தை கொண்டும் தாமதமாக செல்லக்கூடாது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வேட்பு மனுக்களை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கையேடுகள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.வேட்புமனுக்களை பெறுவது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்ப பெறுதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை, மற்ற வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.