. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று மாலை முதல் அதிகனமழை பெய்ய  வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ”ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வெளியே செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நெல்லை, கடலூர், புதுக்கோட்டை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

  இந்நிலையில் தமிழகம், புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
  அதில் தமிழகத்தில் இன்று (01.12.2019) அதிக கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (02.12.2019) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.