. -->

Now Online

FLASH NEWS


Saturday 14 December 2019

நாளை முதல் FASTAG கட்டாயம்! மீறினால் இருமடங்கு அபராதம்



தமிழகத்தில் நாளை முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்படுகிறது. சுங்கச்சாவடி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் ஃபாஸ்ட் டேக் பெறாமல், பணமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி வழியாக செல்லும் போது ஃபாஸ்ட் டேக் என்ற வார்த்தையை படித்திருப்போம். இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கட்டணத்தை முன்கூட்டியே டெபிட்கார்டுகள் போல் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளவேண்டும்.


இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் கார் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் தடுப்புக்கம்பிக்கு மேல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கார் செல்லும் போது, தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர் கார் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை உடனடியாக ஸ்கேன் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்த சில் விநாடிகளிலேயே மொத்தமாக செலுத்திய பணத்தில் இருந்து குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். உடனே தடுப்புக்கம்பி தானாகவே திறந்து கொள்ளும்.இவை அனைத்தும் தொழில்நுட்ப முறையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.


சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் டேக் வசதியானது RFID என்ற தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் ஃகாரில் ஒட்டியுள்ள ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து விடும்.





டிசம்பர் 1 ஆம் தேதிமுதல் ஃபாஸ்ட் டேக் அவசியம் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 15 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோர்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபாஸ்ட் டேக் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாகன நெரிசலை வெகுவாக குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது மத்திய அரசு.





இந்நிலையில், நாளைக்குள் அனைத்து வாகன ஓட்டிகளும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது கட்டாயம் ஃபாஸ்ட் டேக் வைத்திருக்க வேண்டும் என்றும், ஃபாஸ்ட் டேக் இல்லாமல் அந்த வழித்தடத்தில் பயணித்தால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source: Newstm.in