. -->

Now Online

FLASH NEWS


Monday 6 January 2020

மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொலவபாளையம் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். ஈரோடு மாவட்டத்தில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் துறைக்கு துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி தமிழக முதல்வர் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ ஒருங்கிணைந்து பணிகளை ஆற்றி வருகிறார். ஏரிகள், குளங்கள், தூர்வாரும் திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கோப்புகள் தேங்காமல் நாள்தோறும் விரைந்து செல்கின்ற அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்படாமல் உள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பங்கினை அரசு அளித்து வருகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என கூறினார்.