. -->

Now Online

FLASH NEWS


Friday 31 January 2020

ஈஸியா தொப்பையை குறைக்கலாம் !


டீ-ஷர்ட், ஃபிட் ஆன ஆடைகளை அணிய முடியவில்லையா? தொப்பை பற்றின கவலையா ? தொப்பை எல்லோருக்கும் இருக்கக்கூடியது. நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வரும். சரியான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவை தடைப்படும்போது, உடலின் அமைப்பு மாறிவிடும். தொப்பை எதனால் வருகிறது என்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.

1. ஆரோக்கியமற்ற உணவுகள்
சீஸி ஃப்ரை, சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, ஜிலேபி போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்யும். இவ்வாறான உணவுகளில் உடலுக்கு தேவையான எந்த ஆரோக்கியமும் கிடையாது. இதுபோல சிற்றுணவுகளை தவிர்க்க வேண்டும்.

2. உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
கார்டியோ வொர்க் அவுட் செய்வதால், தொப்பை குறையும் என்று நீங்கள் நம்பினால் அது முற்றிலும் தவறு. தினமும் யோகா, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை செய்வது நல்லது. இதயம் பலப்படுவதோடு தட்டையான வயிறையும் பெறலாம்.


3. மன அழுத்தம்
மன அழுத்தமும் உடல் எடை மற்றும் தொப்பை வர ஒரு முக்கிய காரணம். மன அழுத்தமானது உடலில் கார்டிசாலை சுரக்க செய்கிறது. இது உடல் இயக்கத்துக்கு தேவையானதை விட அதிகமாக, கல்லீரலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை கூடும் வாய்புகள் உள்ளது.
4.ஒழுங்கற்ற தூக்கம்
குறைவான அல்லது ஒழுங்கற்ற தூக்கமும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர காரணம். ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு உடலின் வடிவம் மாறக்கூடும். தூக்கம் குறையும்போது, உடல் எடை தானாக உயரும்.


இவை நான்குமே தொப்பை ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது. தொப்பையை குறைக்க எளிய ஐந்து வழிகள் இதோ :

தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இருக்கமான கொழுப்புகளை கரைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு.

காலை உணவாக ஒரு கப் ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களில் மன அழுத்தத்தை சரிசெய்யும்

துரித உணவுகள், சிப்ஸ், கேக், குக்கீஸ் போன்ற இனிப்பு வகைகள் தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடாமல், ஆறு வேளையாக பிரித்து சாப்பிடலாம்.

தினமும் எட்டு மணி நேர உறக்கம் உடலுக்கு நிச்சயம் தேவை. உறக்கம் கெடும்போது, ஆரோக்கியம் கெட்டு உடல் எடையும் அதிகரிக்கும்.

ஜாக்கிங், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை வாரத்தில் நான்கு நாட்கள் நிச்சயம் செய்திருக்க வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதனால் கலோரிகள் எரிக்கப்பட்டு, தசைகள் வலுவடைந்து, உடலுக்கு நல்ல அமைப்பு கிடைக்கும். இவற்றை எல்லாம் நீங்கள் சரியாக செய்து வந்தால் தானாகவே தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை பெறலாம்.