. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 January 2020

முறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..!?


தினமும் முழுமையான தூக்கம் இல்லை என்றால் அடுத்த நாள் முழுவதும் உடலும் மனமும் சோர்ந்து காணப்படும்.எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய முடியாது.தலை வலி ஒரு பக்கம் பின்னியெடுக்கும்.சரி,இன்னைக்கு லீவுதானே… இந்த வாரம் முழுக்க தூங்காமல் விட்ட எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, மொத்தமா ஒரு மொரட்டு தூக்கத்தைப் போட்டிடலாம் என்று பிளான் போட்டுத் தூங்கினாலும் ஆபத்து என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்! 

இரவில் சீக்கிரமாகத் தூங்கிவிட்டு அதிகாலை எழுந்து அன்றைய வாழ்க்கையை உடற்பயிற்சியோடு தொடங்குவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.ஒரு நாளில் 11 மணி நேரத்திற்கும் மேலாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவோ  தூங்குபவர்களுக்கு  நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறிந்திருக்கிறார்கள். ஃபைப்ரோஸிஸ் (pulmonary fibrosis) எனப்படும்,இந்த நோய், முறையற்ற தூக்கம் உள்ளவர்களில் மூன்று பேரில் இருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது!




இந்த நோய் பாதிப்புள்ளானவர்களின் நுரையீரல் தசைகள் பாதிப்புக்குள்ளாகி காயங்களை ஏற்படுத்துவதால், நுரையீரல் ஆரோக்கியமாக செயல்படுவதில் குறைபாடு ஏற்படுவதாக சொல்கிறார்கள்.தினமும் 7 மணி நேரம் தூங்குபவர்களுடன் ஒப்பிடுகையில் ஒருநாளைக்கு 3 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 2 மடங்கு பாதிப்பும் ,11 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களுக்கு  3 மடங்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாம். குறிப்பாக இரவில் நீண்ட நேரம் தூங்காமல் நைட் ஷிப்ட்டுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த கோர் கிளாக் ப்ரோடீன் எனப்படும் REVERBa நுரையீரல் பைப்ரோசிஸில் முக்கிய ப்ரோடீன் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என விளக்கியுள்ளனர்.மேலும் இந்த நுரையீரல் பைப்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எடுத்த சாம்பிள்களை ஆய்வு செய்தபோது இந்த முக்கிய ப்ரோடீன் குறைபாடு, நுரையீரலில் கொலாஜெனை குறைவுபடுத்தும். மேலும் ஆய்வுகளின்படி, தூங்கும் நேரத்தை முறைப்படுத்தினாலே இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வின் முடிவில் தெரிவித்திருக்கிறார்கள்.