. -->

Now Online

FLASH NEWS


Monday 20 January 2020

லஷ்மண், டிராவிட், கும்ப்ளேவை முன்மாதிரியாக்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர்! என் இதயத்தை தொட்ட நிகழ்ச்சி இதுதான்"... பிரதமர் மோடி பேச்சு...

நாடு முழுவதும் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுடன்  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 2.6 லட்சம் மாணவா்கள், பெயா்களைப் பதிவு செய்தனா். தோ்வு செய்யப்பட்ட 1,050 மாணவ, மாணவிகள் நேரில் பங்கேற்றனா். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவா்கள் உட்பட தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட 66 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசுகையில்,
 2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் இன்று உரையாற்றுகிறேன். நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற இந்த தலைமுறை தங்களை சரியாக தயார்படுத்திக்கொண்டு செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகச் சூழல் இன்று மிகவும் மாற்றமடைந்துள்ளது, வாய்ப்புகள் பெருகியுள்ளன. மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலம் என்ற நிலை மாறியுள்ளது. இவற்றை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். எனவே வாழ்வில் தேர்வு தான் முக்கியம் என பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 
 மாணவர்களின் எதிர்காலம் பெற்றோர்களுக்கு பெருமைச் சொல்லாகக் கூடாது. கல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் நாம் இயந்திரமாகி விடுவோம். இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள நமது நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டியது முக்கியம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் விருப்பப்படி எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.


 இன்றைய காலகட்டத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன, அவற்றை இளைய சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறேன்.
 2022-ஆம் ஆண்டு நமது 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை நாம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். நமது நாட்டுத் தயாரிப்புகளை சந்தைப்படுத்த வேண்டும். இதனால் நாடு வலுப்பெற்று நமது பொருளாதாரம் உயரும். இதனை சாத்தியப்படுத்த நாம் அனைவரும் உறுதிகொள்வோம். 
 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஆனால், விவிஎஸ் லஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்டின் சிறப்பான ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 2002-ஆம் ஆண்டில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்கு தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது. அப்போதும் அவர் மனம்தளராமல் பந்துவீசி ஜாம்பவான் வீரர் லாரா விக்கெட்டைக் கைப்பற்றினார். அதில் அவர் பந்துவீச வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. இருப்பினும் அந்த போராட்ட குணம் தான் நமது அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது. இதர வீரர்களுக்கும் உத்வேகம் அளித்தது. இதுபோன்று தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அப்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று பேசினார்.



 நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவா்களுக்கு வரும் மாா்ச் - ஏப்ரல் மாதங்களில் முழு ஆண்டு தோ்வு நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் மாணவா்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமா் மோடி அவா்களை சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறாா். இந்நிகழ்ச்சியை, கடந்த ஆண்டு வானொலி, தொலைக்காட்சி சேனல்களில், 8.5 கோடிக்கும் அதிகமான மாணவா்கள் பாா்த்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த ஆண்டு1.4 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா்.

"என் இதயத்தை தொட்ட நிகழ்ச்சி இதுதான்"... 
 
 இதில் பேசிய பிரதமர் மோடி, "உங்களுடைய இதயத்தை தொட்ட நிகழ்ச்சி எது என என்னிடம் யாரேனும் கேட்டால் இந்த நிகழ்ச்சியைதான் சொல்வேன். மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில், அவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இளம் வயதினர் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்" என தெரிவித்தார். மேலும் பேசிய மோடி, "சந்திராயன் 2 திட்டம் தோல்வியடைந்தபோது நானும் கவலை அடைந்தேன். ஆனால், பின்னர் விஞ்ஞானிகளுடன் சென்று பேசி, அவர்களை ஊக்கப்படுத்தினேன். தோல்விகளில் இருந்துதான் வெற்றிக்கான பாடத்தை கண்டறியவேண்டும்" என தெரிவித்தார்.