. -->

Now Online

FLASH NEWS


Monday 13 January 2020

உங்கள் மொபைல் டேட்டா-வை மிச்சப்படுத்த உதவும் வாட்ஸ்அப் யுத்திகள்..!

மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்தல்களையும் தாண்டி உங்களது டேட்டாவை மிச்சப்படுத்தும் வகையிலும் வாட்ஸ்அப் செயலியிடம் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் Vacation Mode என்றதொரு ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவைப்படாத வாட்ஸ்அப் குழுக்களை நீங்கள் மியூட் செய்ய முடியும். Vacation Mode பயன்படுத்த:



1. நீங்கள் மியூட் செய்ய விரும்பும் வாட்ஸ்அப் குழுவுக்கு செல்லவும்.

2. திரையின் வலது மேல் ஓரத்தில் உள்ள ‘மூன்று நேர்வாக்கு புள்ளிகள்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. 'Mute Notifications' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. 8 hours, 1 week, or 1 year என வரும் ஆப்ஷனுள் உங்கள் வேண்டியதை தேர்வு செய்யலாம்.ஆட்டோ- டவுன்லோடு ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பது உங்களது டேட்டா செலவை மிச்சப்படுத்தும்.

1. வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யவும்.

2. திரையின் வலது மேல் ஓரத்தில் உள்ள ‘மூன்று நேர்வாக்கு புள்ளிகள்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. ‘Settings' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. 'Data and Storage Usage' தேர்ந்தெடுக்கவும்.

5. 'Media auto-download' தேர்வு செய்யவும்.

6. மொபைல் டேட்டா, வைஃபை, ரோமிங் இதனுள் உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். போட்டோ, ஆடியோ, வீடியோ, டாக்குமென்ட் இதனுள் உங்களுக்குத் தேவையானதை de-select செய்யவும்.