. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 February 2020

பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், ஏப்ரலுக்கு முன்பே மாணவர் சேர்க்கையை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 விளம்பரம் கொடுத்து, கல்வியாண்டு தொடங்கும் முன்பே, அதாவது ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர் சேர்க்கையை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 தனியார் டியூசன் மையங்களும் தற்போது அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. டியூசன் மையங்களும் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 பொதுவாக தனியார் பள்ளிகளில் டிசம்பர் மாதம் முதலே மாணவர் சேர்க்கைத் தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து விடும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.