. -->

Now Online

FLASH NEWS


Sunday 9 February 2020

சென்னையில் இப்படியொரு மாபெரும் கின்னஸ் சாதனை - அதுவும் நம்ம மாணவிகளால்...!


தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய நடனமாகவும், மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகவும் பரத நாட்டியம் விளங்குகிறது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

தமிழகக் கோயில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சைவ சமயக் கடவுளான சிவன் நடனமாடும் வகையில் நடராஜர் என்ற உருவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு வகையான சாதனைகள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை பற்றி இங்கே காணலாம். தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் சதிர் 1000 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் கூடி பரதநாட்டியம் ஆடினர். உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வை காண கின்னஸ் நடுவர் சோப்பியா கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா துறை இயக்குநர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் 10 ஆயிரத்து 176 பேர் கலந்து
கொண்டு பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர். இதற்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் சோப்பியா வழங்கினார்.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சிதம்பரத்தில் 7,190 பேர் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடியதே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.