. -->

Now Online

FLASH NEWS


Tuesday 31 March 2020

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவான கதை இது தான்!


அங்க பாரு கரப்பான் பூச்சி, நேத்து மேட்ச் ல RCB ஜெய்ச்சிடுச்சு என்று சொல்ல வைத்து பின்னர் ஏப்ரல் ஃபூல் சொல்லும் பழக்கம் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. உண்மையில் இது முதன்முதலில் அறிமுகமானது ஐரோப்பாவில் தான். முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது குறித்த பல்வேறு கதைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் அதிம பேரால் சொல்லப்படுவது. இரண்டு. முதல் கதை போப் பற்றியது. இரண்டாவது பிரான்சில் இருக்கும் அரியவகை மீன் பற்றியது. முதலில் நாம் போப் அவர்களை பார்த்துவிட்டு பிரான்ஸ் செல்லலாம்.


*ஃபூல் சொன்ன போப்

வருடப்பிறப்பு எப்போது என்றால் விடை ஜனவரி 1 என பதில் வரும். இதுவே 1500 களில் உள்ள ஐரோப்பாவில் கேட்டிருந்தால் ஏப்ரல் 1 என பதில் வரும். ஆமாம். அப்போதைய ஜூலியன் நாட்காட்டியிலும் இவ்வாறு தான் இருந்துள்ளது. அதாவது முதல் மாதம் ஏப்ரல். அதன் முதல் தேதி வருடப்பிறப்பு. இது இப்படியிருக்க 13 ஆம் போப்பாண்டவராக பொறுப்பேற்றுக்கொண்டார் கிரிகோரி. பதவிக்கு வந்ததும் போப் செய்த முதல்வேலை காலண்டரை மாற்றியதுதான்.
1582 ஆம் ஆண்டு கிரிகோரியன் காலண்டரை வெளியிட்டார் போப். கிரிகோரி வெளியிட்டதால் அதன் பெயர் கிரிகோரியன் காலண்டர் எனப்படுகிறது. ஆரம்பத்தில் இதெயெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என பா நாடுகள் முரண்டு பிடித்திருக்கின்றன. அவர்கள் பழைய ஜூலியன் காலண்டரையே பின்பற்றத் தொடங்கினார்கள்.
கிரிகோரியன் காலண்டரை தங்களது வீட்டில் மாட்டியோர் ஜனவரி மாதம் முதல் தேதியையும், ஜூலியன் தான் நாங்கள் பின்பற்றும் காலண்டர் என்றோர் ஏப்ரல் 1 ஆம் தேதியை வருடப் பிறப்பாகக் கொண்டாடினர். ஆனாலும் போப் அவர்களுக்கு ஜூலியன் வகையறாக்களை பிடிக்கவில்லை. அதனால் ஒரு காரியம் செய்தார்.


ஏப்ரல் 1 அன்று ஜூலியன் காலண்டரைப் பின்பற்றும் மக்களின் வீடுகளுக்கு போப்பின் விசுவாசிகள் பரிசுப்பொருட்களை அனுப்பி வைத்தனர். அதைத் திறந்து பார்த்தால் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் என்று எழுதியிருந்தது. இப்படித்தான் இந்த மாபெரும் வழக்கம் வந்தது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி ஆகிய நாடுகள் இந்தப் புதிய நாட்காட்டியை 1582 அக்டோபர் முதல் பயன்படுத்த துவங்கியுள்ளன. 

இந்தியாவிற்கு கிரிகோரியன் காலண்டர் அறிமுகமானத்ர்கு காரணம் வெள்ளையரின் வருகை தான். இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் இங்கிலாந்துக்காரர்களினால் தான் கிரிகோரியன் காலண்டர் பரவத் தொடங்கியது.

*மீன்கள் தினம்*

1500களில் ஐரோப்பியர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதியை ஏப்ரல் மீன்கள் தினமாகக் கொண்டாடுவார்கள். அப்போதைய ஐரோப்பியர்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு அது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்கும். அதனால் அந்தச் சமயத்தில் மீன்பிடிப்பது மிகவும் சுலபம். ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது. பின்னர் அது மனிதர்களை ஏமாற்றும் நாளாக அந்நாள் மாற்றம் கண்டது.