. -->

Now Online

FLASH NEWS


Tuesday 24 March 2020

பிரதமர் மோடியின் 21 நாட்கள் உத்தரவு என்னென்ன !!! முழு விவரம்


1. வல்லரசு நாடுகள் , கொரானாவால் நிர்கதியாக நின்றதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். கொரானாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி மட்டுமே தீர்வு.

2. இன்று இரவு 12 மணி முதல்  நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் , ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் ஊடரங்கில் வரும்


3. 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

4. கொரோனா பாதிப்பு சங்கிலியை உடைத்தாக வேண்டும். கொரோனாவிற்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டனர்.மக்கள் ஊரடங்கு மகத்தான வெற்றி பெற்றது.

5. தேசத்தையும் , குடிமகயைும் காப்பாற்றவே இந்த முடிவு. முழு ஊரடங்கின் மூலமாக தேசம் பொருளாதார நெருக்கடி உண்டாகும்.

6. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பேரிடரில் இருந்து இந்தியா எப்படி காத்து கொள்கிறது என்று காட்ட வேண்டிய தருணம் இது.

7. அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக சவாலான தருணம். சுகாதார பணிக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

8. அரசின் ஆலோசனைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு.

9. உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். 

10. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

11. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.

12. கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது , நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.

13. கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14. நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி.

15. ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத் தீ போல பரவும். ஒருவரை தாக்கும் கொரோனா, 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும். அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்

16. கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன.

17. மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம்.

18. அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாங்கள் பாடுபடுகிறோம். அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

19.ஏழைகளின் கஷ்டத்தை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும் ஊழியர்களும் உதவுகிறார்கள். ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.