. -->

Now Online

FLASH NEWS


Monday 23 March 2020

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்


   தமிழகத்தில் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு, நாளை மாலை முதல் 144 தடை

சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மார்ச் 31 ஆம் தேதி வரை மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் உத்தரவு

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, மற்றவற்றை மூட உத்தரவு

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு தடையில்லை - முதலமைச்சர்

நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்

கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் - முதலமைச்சர்

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர்

அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசிய பொருள் போக்குவரத்து தவிர மற்ற அனைத்துக்கும் தடை

பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது - முதலமைச்சர்

மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்கு தடை

பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு

அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது - முதலமைச்சர்

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்

தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சர்

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் - முதலமைச்சர்

அத்தியாவசிய கட்டிடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை

தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது - முதலமைச்சர்

வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி

பிற இடங்களுக்கு சென்று வந்தவர்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது - முதலமைச்சர்

வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, மருந்து பொருட்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது - முதலமைச்சர்


*தனியார் நிறுவனங்கள் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது - 

*அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது - முதல்வர் பழனிசாமி.

*உணவகங்கள், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - முதல்வர் பழனிசாமி.

DOWNLOAD HERE CM SPEECH