. -->

Now Online

FLASH NEWS


Monday 30 March 2020

சளி இருமலை போக்க எளிய வீட்டு வைத்திய சூப்பர் டிப்ஸ் இதோ!

சளி இருமலை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!



இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும் தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை
கற்பூரவல்லி இல்லை - 2 அல்லது 3
தண்ணீர் - 150 மில்லி லிட்டர்
தேன் - சிறிதளவு
செய்முறை
முதலில் கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அதன்பின், 150 மில்லிலிட்டர் தண்ணீரில் அந்த இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அத்தானுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு, கற்பூரவள்ளி இலையை, குக்கரில் இருந்து வரும் அஆவியில் காட்டி, அதில் இருந்து வரும் சாற்றினை, தாய்ப்பாலில் கலந்து குடிக்க கொடுத்து வந்தால், சளி, இருமல் பிரச்னைகள் இருக்காது.

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு டீ
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

எலுமிச்சை சிரப்
ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.

வெங்காய சிரப்
ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.
கல்விச்சுடர்

எளிய வீட்டு மருந்து
சளி, இருமலைப் போக்கும் இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும். சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி  தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.  இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம்.


கூடுதலாக 20 டிப்ஸ்

1.தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

2.மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

3.வெங்காயம் சளியை முறிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும். கவனிக்க.. சின்ன வெங்காயத்தை சமைக்காமல், அப்படியே பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும். 

4.மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை பறந்து போய் விடும்.

5.மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்.

honey ginger

6.தேன் மற்றும் இஞ்சி சாற்றை சம அளவு  கலந்து அருந்தி வந்தால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

கல்விச்சுடர்

7.நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

8.கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு சூப் அருமையான மருந்து.

9.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

10.தினமும் சிறிதளவு தேன் சாப்பிட்டு வந்தால், சளி எட்டிப் பார்க்கவே பயந்து ஒதுங்கும். சுத்தமான தேனில் இருக்கும் வைட்டமின்கள், ஜலதோஷத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

thulsi

11.தினமும் ஒன்றிரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது. 

12.சின்ன வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வந்தால் சளியும், இருமலும் காணாமல் போய்விடும். 

13.சூடான பசும்பாலில் ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.) ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரையில் இருவேளை காலை, மாலை பருகி வந்தால் இருமல் இருந்த இடமே தெரியாது.

14.தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்

pepper

15.சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலே நல்ல குணமாகிவிடும். 

16.சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத் தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வைத்துக்கொண்டு, தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வர சளி சரியாகிவிடும். 

17.ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி, அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 

18.ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.

garlic

19.சளி இருமலை போக்க பூண்டு நல்ல மருந்து. 4 அல்லது 5பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பூண்டு பல்லை வதக்கவும். சூடாக இருக்கும் போதே இதை சாப்பிட்டு விட்டால் சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

20.ஜலதோசத்தின் போது தொண்டைவலியும் நிரந்தரமாகவே நம்மை படுத்தி எடுக்கும். இளஞ்சூடான வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்கவேண்டும். இது உடனடியாக செலவில்லாத எளிய வழிமுறை. தொண்டையில் வலியை குறைத்து சளியையும், இருமலையும் போக்கும்.