. -->

Now Online

FLASH NEWS


Monday 23 March 2020

தமிழகம் முழுவதும் உணவகங்கள் இயங்கலாம்.. ஆனால்.... முதல்வர் விதித்த அதிரடி கட்டுப்பாடு


தமிழகம் முழுவதம் உணவங்கள் இயங்கலாம் என்றும் ஆனால் உணகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது என்றும்பார்சல் மட்டுமே வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை உள்பட தமிழகதத்தின் அனைத்து தொழில் நகரங்களிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பேச்சுலராக தங்கி உணங்களை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.திடீரென தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எங்குமே வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல அனுமதி இல்லை. அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படலாம் மற்றபடி வாய்ப்பு இல்லை. இதேபோல் பொதுபோக்குவரத்து, ஆட்டோ, கார், டாக்ஸி, பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாது. சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தாலும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. அத்தியாவசியப்பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. இந்நிலையில் உணவங்கள் இயங்குமா இயங்காத என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ஆனால் உணவங்கள் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைத்தான் முதல்வர் சொல்லியிருக்கிறார். 

சட்டசபையில் இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், " வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்" என்றார்.

இதன்படி சாப்பாடு விநியோகம் செய்யும் ஓட்டல்கள், உணவங்களில் பார்சல் மட்டுமே அளிக்க வேண்டும். அதற்கு மட்டுமே அனுமதி. மற்றபடி கடைகளில் அமர்ந்த சாப்பிட அனுமதி கிடையாது.