. -->

Now Online

FLASH NEWS


Sunday 15 March 2020

தகவல் தெரிவிக்க கூடிய தொற்றுநோயாக கரோனாவை அறிவித்தது தமிழக அரசு



இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 107 ஆக அதிகரித்துள்ளது.

  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 19 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில் தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக கரோனாவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டியது ஒரு நோயாக அறிவித்துள்ள தமிழக அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் மேலும், தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள கூடாது எனவும் தமிழக அரசு.