. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 April 2020

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனோ வைரஸ் தாக்குதல்





தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு- சுகாதாரத்துறை செயலர் தகவல்.

இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது - பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலர்.

அதேவேளையில் 8 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா

 இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 3374 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் புதிதாக 472 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 267 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.