. -->

Now Online

FLASH NEWS


Sunday 31 May 2020

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.



ஒவ்வொரு இந்தியரும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

கொரோனா எதிர்ப்பு  களத்தில் முன்னணியில் நிற்கும் களவீரர்களுக்கு நன்றி.

மன்கிபாத் உரையில் கடந்த முறை பொதுபோக்குவரத்துகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்திருந்தேன்.

தற்போதைய மன்கிபாத் உரையின் போது பொது போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

இடம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டதால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்தது.

கொரோனாவுக்கு எதிரான புதிய வியூகங்கள் அனைத்து தரப்புகளில் இருந்தும் வெளிப்பட்டது பெருமிதம் தரக் கூடியதாக இருந்தது.

மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார்.

தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள்.

மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம்.

இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர்.

பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.