. -->

Now Online

FLASH NEWS


Tuesday 30 June 2020

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவனின் மனக்குமுறல்...

✨படித்ததில் பிடித்தது...

💥அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவனின் மனக்குமுறல்...

✨அட்டை போடாத அஞ்சாவது புக்கு என்னைக்கோ கிழிஞ்சுருச்சு ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு  அறிவிப்பு மட்டும் வந்திருச்சி ... 

பள்ளிக்கூடம் பூட்டு போட்டு 
மாசம் இன்னைக்கு நாலாச்சு..
பிரைவேட்ல படிக்கிறவனுக்கு ஸ்கூல் வீட்டுக்கே வந்தாச்சு.. 

 ஆன்லைன்ல படிக்கிறேன் டா ஆணவமா ஆதி சொன்னான்.. 
எதிர்வீட்டு கோபி சொன்னான்
ரெண்டு ஜிபி தேவைப்படுமாம்.. 

சட்டையில மட்டுமில்ல அப்பா போன்லயும் ரெண்டு பட்டன் இல்லை ..
ஸ்மார்ட் போன் வாங்க காசு இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டி சேர்த்திருப்பார் .. 

கூலிக்கு மாரடிக்கும் குருவம்மா எங்கம்மா..
கூறுகெட்ட கொரானாவால வீட்டுக்குள்ளே முடங்கிருக்கா..
அப்துல் கலாம் ஆவன்னா  அரசு பள்ளியில சேர்த்துவிட்டா?ஒருவேல சுடுசோறு தின்பான்னு ஆசைப்பட்டா..

 இப்ப சொல்லித் தரவும் ஆளில்லை .. 
சோத்துக்கும் வழியில்ல..
கத்துதந்த வாத்தியாரும் அரிசி போட போய்ட்டாராம்.. 

வறுமை ஒன்னும் புதுசில்ல
வாழ்ந்து பார்த்து பழகிடுச்சு ..
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான் வாசல் பார்த்து காத்திருக்கேன்.. 

மாஸ்க் வாங்க காசு இல்ல கர்ச்சீப் தான் கட்டிக்கிறேன். . 
புக்கு மட்டும் குடு சாமி
புரட்டி  கிரட்டி  கத்துக்கறேன்.. 
    
                                  - வெற்றிவேந்தன்
         VI std???