. -->

Now Online

FLASH NEWS

Thursday 4 June 2020

சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக விவரங்களை மாநகராட்சி வெளியீடு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 2,029 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,798 பேருக்கும், அண்ணாநகரில் 1,525 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 2,093 பேரும், தேனாம்பேட்டையில் 2,014 பேரும், திருவொற்றியூரில் 610 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 939 பேருக்கும், பெருங்குடியில் 301 பேருக்கும், அடையாறில் 1007 பேருக்கும், அம்பத்தூரில் 651 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 261 பேருக்கும், மாதவரத்தில் 431 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 306 பேருக்கும், மணலியில் 246 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Source Maalaimalar