. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 July 2020

100 நாள் வேலைத்திட்டம்; மண் அள்ளும் ஆசிரியர்கள்! -ஊரடங்கு அதிர்ச்சி


கடந்த மார்ச் மாதம் கல்லூரியில் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும்போது, கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தற்போது மூன்று மாதங்களைக் கடந்து லாக்டௌன் நீடிக்கிறது.

அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மாதங்கள் நான்கு கடந்த பிறகும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் சுயநிதி கல்லூரிகளில் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்கள்
இதுபற்றி ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். “ஒரு சில கல்லூரிகளில் முதல் மாதம் முழு ஊதியம் தந்தார்கள். பிறகு பாதியாகக் கொடுத்தனர். பின்பு கல்லூரிகள் திறந்த பின்பு தருவதாகவும் வீட்டில் தானே இருக்கிறீர்கள்… அப்படியிருக்கும்போது எவ்வாறு சம்பளம் தர முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்

தொடங்கியதிலிருந்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் சேதாரமின்றி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், 4 மாதங்கள் தாண்டிய பிறகும் சம்பளம் இல்லாமல் திண்டாடுகிறோம். எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று தவிக்கிறோம். அரசு மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை சுயநிதி கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.

வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாள்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலையைச் செய்து வருகிறோம். சிலர் இட்லிக் கடைகளை நடத்துகின்றனர்.




ஒரு பிரபலமான பள்ளியில் நல்ல செல்வாக்குடன் பணியாற்றி வந்த முதல்வர் ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி, தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்” என வேதனைப்பட்டனர்.
Source Vikatan