. -->

Now Online

FLASH NEWS


Monday 6 July 2020

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு

ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளி கல்வி நிறுவனங்கள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தொடக்கப்பள்ளிகள் , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும். பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.