. -->

Now Online

FLASH NEWS


Wednesday 12 August 2020

அரசுக்கு சிறப்பாசிரியர்கள் கோரிக்கை

கீழ்வேளூரில் கவின்கலை பட்டதாரிகள் நல சங்க தலைவர் அய்யாவு நிருபர்களிடம்
கூறியது: சிறப்பாசிரியர்களான ஓவியம், உடற்கல்வி, தையல், இசை ஆகிய நான்கு துறையினருக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டிதேர்வை நடத்தியது. அதில் ஓவிய துறையில் வெற்றி பெற்ற 327 ஆசிரியர்களில் 240 பேருக்கு
பணி ஆணை வழங்கி 6 மாதம் ஆகிவிட்டது.மீதமுள்ள 87 பேருக்கு, தமிழ்வழி இட ஒதுக்கீடு,
சமுக நலத்துறை, மாநகராட்சி வழக்கு காரணமாக தாமதமாகி இருந்தது.

இந்நிலையில் அரசு தரப்பு மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்ற பிறகு சட்டசபையில்
தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா கொண்டு வரப்பட்டது. இதனால் வழக்கு முடிந்த சில நாட்களில் பணி ஆணை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் இருந்தோம். தேர்வு எழுதி 3 ஆண்டு நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடன்
தவிக்கிறோம். எனவே அரசு
விரைவில் பணி ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.