. -->

Now Online

FLASH NEWS


Monday 3 August 2020

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது முதல்வர் அறிவிப்பு

*மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை

*முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர்,
ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக
எதிர்த்து வந்தனர்

* "அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக
அரசியல் கட்சிகள் இரு​மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளன"

* புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்

*மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்

**தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி*

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை இல்லை

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது 

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் 

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது 

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படும் 

1968ம் ஆண்டு சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து இந்தி நீக்கப்பட்டது 

தமிழக மக்கள் 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர் 

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் 

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளை களைய உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.