. -->

Now Online

FLASH NEWS


Friday 7 August 2020

புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்..!

 

 • ஏற்றத் தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது

• கலந்தாலோசனை, ஆய்வு அடிப்படையிலான கல்வியை நாம் ஊக்குவிக்க வேண்டும்

• பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கை
உருவாக்கப்பட்டுள்ளது

• புதிய கல்விக் கொள்கையின் வெற்றியை நாம் அனைவரும் இணைந்து உறுதிப்படுத்த
வேண்டும்

• பல வருடங்களாக நடைபெற்ற ஆலோசனை, விவாதங்களை தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

• கல்வி மற்றும் திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய கல்விக்
கொள்கை அவசியம்


• உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை
மறக்க கூடாது
தொழிலாளர்களை இளக்காரமாக பார்க்கும் போக்கை மக்கள் மாற்றிக் கொள்ள
வேண்டும்


• சிறப்பான உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கும்


• வகுப்புகள், பாடங்கள் என மாணவர்கள் மீது நாம் அழுத்தம் கொடுக்க கூடாது


• 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி என்பது தான்
இலக்கு
பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை
புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களின் திறன்களையும்
மேம்படுத்தும்

• புதிய கல்விக் கொள்கை தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும்
மதிப்பு அளிக்கப்படும்.

என பிரதமர் மோடி கூறியுள்ளார்.