t> கல்விச்சுடர் பொருள் வாங்காமல் பொருள் வாங்கியதாக SMS வந்தால் ரேஷன் கடை ஊழியர் டிஸ்மிஸ், வந்து விட்டது புகார் எண் .. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 February 2017

பொருள் வாங்காமல் பொருள் வாங்கியதாக SMS வந்தால் ரேஷன் கடை ஊழியர் டிஸ்மிஸ், வந்து விட்டது புகார் எண் ..


ரேஷன் கடைககளில் நடக்கும் முறைகேட்டை தடுக்க டிஜிடல் முறையில் பில் போடும் வசதிகள் செய்யப்பட்டது. இதில் வாடிக்கையாளர் பொருள் வாங்கியதும் அவரது மொபைலுக்கு தானாக எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை கொள்ளை அடிப்பதை தடுக்க முடியும் என இது நடைமுறைபடுத்தப்பட்டது.

எனினும் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர்களின் பெயரில் கடை ஊழியர்களே பில் போட்டு பொருட்கள் வாங்கியதாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றாச்சாட்டு எழுந்து வந்தது.

அவ்வாறு கடை ஊழியர்கள் பதிவு செய்யும் போது பொருள் வாங்காத சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு பொருள் வாங்கியதாக SMS ம் செல்கின்றது.

நான் பொருளே வாங்கவில்லையே பொருள் வாங்கியதாக SMS வருகின்றதே என வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்து வருகின்றனர்.

இதை தடுப்பதற்காக தற்போது புகார் எண் ஒன்றை உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இந்த எண்ணிற்கு 9980904040 ”நான் பொருள் வாங்கவில்லை” என டைப் செய்து அனுப்பினால் போதும் மற்றவைகளை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆன்லைன் மூலம் இந்த புகார் உதவி கமி‌ஷனருக்கு அனுப்ப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் முறை கடை ஊழியருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும், 2 வது முறை செய்தால் அபராதம் விதிக்கப்படும், 3 வது முறை செய்தால் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL