தெற்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் போலி ரூ. 2 ஆயிரம் தாள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, டெல்லியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் அதில் இருந்து குழந்தைகள் விளையாடும் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தது. சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று நோட்டில் அச்சிடப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உடனடியாக புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்த போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு டெல்லி கிரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்தது.
கடந்த பிப்ரவி 6 ஆம் தேதி
தெற்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் அப்போது ‘ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா’ என்று இருக்க வேண்டிய இடத்தில் ‘சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சிடப்பட்டு இருந்த 2 ஆயிரம் நோட்டு வந்தது. . இதனால் அவர் வங்கி காவலாளியிடம் அந்த கள்ள நோட்டுகளை காண்பித்தார். பின்னர் வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகள் வந்தது குறித்து டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ஏ.டி.எம்மில் பணம் நிரப்பும் நிறுவனமான பிரின்க்ஸ் இந்தியா நிறுவனத்தில் பொறுப்பாளரான முகம்மது இஷா என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.ஒரு மாத இடைவெளிக்குள் அடுத்தடுத்து இரு இடங்களில் போலி 2 ஆயிரம் நோட்டுக்கள் ஏடி.எம் களில் வந்திருப்பது பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||