t> கல்விச்சுடர் “ஜெ. மரணம் தொடர்பாக அரசின் விளக்கத்தில் உடன்பாடில்லை!” பன்னீர்செல்வம் அணி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 March 2017

“ஜெ. மரணம் தொடர்பாக அரசின் விளக்கத்தில் உடன்பாடில்லை!” பன்னீர்செல்வம் அணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (புதன்) தமிழகம், சிங்கப்பூர், பெங்களூரு, மும்பை ஆகிய பகுதிகளில் மொத்தம் 35 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,"ஜெயலலிதாவின் மரணத்தின் பின் இருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவர மத்திய அரசின் சிபிஐ விசாரணை கேட்டு எங்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அரசு அளித்துள்ள அறிக்கைக்கும், அப்போலோ மருத்துவமனை அளித்திருந்த பல அறிக்கைகளுக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இதில்,ஜெயலலிதா நினைவிழந்து 3 நாட்களாக மயக்கமாக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போலோ மருத்துவமனையின் முதல் அறிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. 'ஜெயலலிதா சாப்பிட்டார்கள், காய்ச்சல் மற்றும் டி-ஹைட்ரேஷன் மட்டும் தான் அவருக்கு இருந்தது' என்ற அப்போலோ கூறியதற்கும் நேற்று வெளியிடப்பட்ட அரசு அறிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதுவும், இந்த 4 பக்க அறிக்கைகள் குறித்து ரொம்ப விரிவாக மெடிக்கோ லீகல் மொழியில் நாங்கள் நாளை பதிலளிக்கவுள்ளோம். எங்களின் 14 கேள்விகளில், ஒன்றுதான் எய்ம்ஸ் சம்பந்தப்பட்டது. அந்த அறிக்கையை, 3 மாதங்களுக்கு முன்னாள் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை இன்று வெளியிட்டது என்பதே தவறு என்று நாங்கள் நினைக்கிறோம். அதே நேரத்தில் இன்றாவது வெளியிட்டார்களே என்று சந்தோசப்படுகிறோம். ஆனால் இது 100 கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் ஒன்றை இப்போது சொல்கிறேன். ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவியை யார் எடுக்கச் சொன்னது, அந்த நாளில் (டிசம்பர் 4-ம் தேதிமாலை நான்கு மணிக்கு) அப்போலோவில் இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் சொல்லப்பட்டது என்னவென்றால், 7 நாட்களுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த 7 நாட்களுக்குள் ஜெயலலிதா இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். அந்த நம்பிக்கையில் நின்று இருந்தோம் அனைவரும். மறுநாள் காலை அந்தக் கருவி எடுக்கப்பட்டதாக அறிகிறோம். இதை எடுக்க உத்தரவிட்டது யார். 12 மணி நேரத்தில் ஏன் எடுத்தார்கள்.அதற்கு உடன்பட்ட குடும்ப உறுப்பினர்கள் யார். இயல்பு நிலைக்குஜெயலலிதா வரமாட்டார் என்ற முடிவை எடுத்தது யார்.

அந்தக் கருவியை எடுக்க அனுமதியை ஜெயலலிதாவின் ரத்த உறவினர்கள்தான் கொடுத்திருக்க முடியும். அப்படி என்றால் அவர் யார். அடுத்து முக்கியமாக சிறப்புப் பாதுகாப்புப் படையை விலக்கிக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது என்பது. இது போல 14 கேள்விகள் எங்களிடம் உள்ளன. அதனால்தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். இப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை கமிஷன் முன்னால் தங்களிடம் இருக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இதுபோல பலவிஷயங்கள் அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்றில்கூட எங்களுக்கு உடன்பாடில்லை. ஆனால் எந்த முக்கிய அமைச்சருக்கும் சரியான தகவலை, ஜெயலலிதாவின் மரணம் குறித்து சொல்லப்படவில்லை என்பது விஜயபாஸ்கருக்கும் தெரியும்." என்றார்.

அதனையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர்பாண்டியராஜன், "நாங்கள் கேள்வி எழுப்பியதால்தான் அரசு அறிக்கை அளித்துள்ளது. எங்களின் கேள்விகளில் ஒன்றுக்குதான் அவர்கள் பதில் கூறியிருக்கிறார்கள். அதிலும் பல கேள்விகள் எழுகின்றன. அதே நேரத்தில் இதே கேள்வியைஜனாதிபதியும் அவர்களிடம் எழுப்பியிருக்கக் கூடும். ஜனாதிபதியை நாங்கள் சந்தித்து ஒருவாரம் கழித்துதான் இந்த அறிக்கை வந்துள்ளது. ஏன் எய்ம்ஸ் அறிக்கைகூட வரவில்லை என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. அதன்பிறகுதான் 3 மாசம் ஆன ஒரு ரிப்போர்ட்டை இப்போது வெளியிட்டு இருக்காங்க. அப்போலோ அறிக்கைக்கும் அரசின் அறிக்கைக்கும் பெரிய 'கான்பிளிக்ட்' இருக்கிறது. அதனால்தான் இவ்ளோ நாள் வெளியிடாமல் இருந்துள்ளார்கள். எய்ம்ஸ் மருத்துவர்கள் மிகுந்த மதிப்புக்குரியவர்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் அவர்கள் அறிக்கையை 3 மாதம் கிடப்பில் போட்டு இருக்கிறார்கள். இதேபோலதான் அப்போலோவும் டிஸ்சார்ஜ் சம்மரியை வெளியிடனும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அன்கான்ஷியஸ் நிலையில் ஜெயலலிதா இருந்தார்கள் என்று கூறப்படும் நிலையில், அவர் சாப்பிட்டார், நலம் பெறுகிறார் என்று அறிக்கைவிட அப்போலோவை யார் சொல்ல வைத்தது. ஏன் வெளிப்படையாக அப்போலோ சம்மரி அறிக்கை கொடுக்கவில்லை. அமைச்சர்களுக்கு உரிய தகவல்கள்கூட முறையாக சொல்லப்படவில்லை. இந்த அறிக்கையில் டாக்டர் சிவகுமார் பெயர் இல்லை என்பதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் அவர் மூலம் மருத்துவமனையில் பல தகவல்கள் கேட்டு அறிந்தோம். இது குறித்தும் நாளை போராட்டத்தில் பேசவுள்ளோம்" என்று கூறினார்.


JOIN KALVICHUDAR CHANNEL